2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மூவர் பலி

Editorial   / 2018 டிசெம்பர் 09 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்று நள்ளிரவு 12.10 மணியளவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் கொழும்பு- காலி பிரதான வீதி மற்றும் இரத்மலானை பகுதியில் இடம்பெற்ற விபத்துகளால் 3 பேர் பலியாகியுள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த 8 பேர் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன்  பின்னரே இதில்  மூவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காரொன்று இரத்மலானை எரிபொருள் நிரப்பும் பகுதியில் வைத்து எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. இதன் போது குறித்த காரின் சாரதியும் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த நபரும் உயிரிழந்துள்ளதுடன், விபத்துக்குள்ளான காரிலிருந்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொருவரும் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள பொலிஸார், ஏற்கனவே இரத்மலானைப் பகுதியில் விபத்தொன்றை ஏற்படுத்திய காரே இந்த விபத்தையும் ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்த மூவரும் 18,54, 21 வயதுடையவர்களென்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இருவரும் பாதசாரிகளென தெரிவித்துள்ள பொலிஸார், இந்த  விபத்தை ஏற்படுத்திய நபர் குறித்து தகவல்கள் எதுவும் தெரியவரவில்லையென்றும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .