Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 02:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரஸ்ஸ – கொஹூகொட பிரதேசத்திலிருந்து தெதியகல வரை பாடசாலை சேவைக்கென ஈடுபடுத்தப்பட்ட பஸ் ஒன்று, எஹலபே பகுதியில் வைத்து இன்று (31) காலை வயல் நிலமொன்றுக்குள் சரிந்து விபத்துக்குள்ளானதில், 15 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகத் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிளொன்றுக்கு இடம் கொடுக்க முற்பட்ட போதே, பஸ் வீதியை விட்டு விலகியதாகப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .