2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விபத்து – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நால்வர் பலி

Editorial   / 2018 நவம்பர் 29 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு- சிலாபம் பிரதான வீதியின் வலஹாபிட்டிய பகுதியில் சொகுசு பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி எமில்டன் கால்வாயில் வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 20 ​பேர் காயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த பஸ் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் உயிர்ழந்தவர்களுள் 3 பெண்களும் அடங்குவதாகவும் இவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .