Nirosh / 2022 டிசெம்பர் 20 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்க்கட்சிகளில் உள்ள கட்சிகளுடன் விரிவான கூட்டணி ஒன்றை அமைத்து உள்ளூராட்சிமன்ற தேர்தலில் களமிறங்க பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணியான உத்தர லங்கா சபா தீ்ரமானித்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று அக்கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று (19) நடைபெற்றிருந்தது. இதன்போது எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தீர்மானிக்கப்பட்டதாக உதய கம்மன்பில எம்.பி தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் வெற்றிபெற்றதும் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் தொடர்பான அறிவிப்புகளை வௌியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago