Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2023 செப்டெம்பர் 28 , மு.ப. 11:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததே இலங்கை விமானங்கள் தொடர்ச்சியாக தாமதமாகி வருவதற்கு முக்கிய காரணம் என விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தினசரி விமான நடவடிக்கைகளுக்கு 24 விமானங்கள் தேவைப்பட்டாலும், தற்போது 20 விமானங்கள் மட்டுமே செயல்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் பேச்சாளர் கூறினார்.
ஆனால் மேலும் இரண்டு A.-330 மற்றும் A.-320 விமானங்கள் நீண்டகால அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. A.-320 Neo குழு விமானங்கள் பிரான்சில் உள்ள Airbus நிறுவனத்திடம் இருந்து புதிய இயந்திரங்களைப் பெறும் வரை மேலும் இரண்டு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக இலங்கையின் பொறியியல் பிரிவில் பணிபுரியும் சுமார் 30 பேர் அதிலிருந்து வெளியேறி வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குச் சென்றுள்ளதால் எஞ்சியுள்ள ஊழியர்கள் தேவையான பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, வியாழக்கிழமை (28) காலை வரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் லாகூர், இந்தியாவின் சென்னை மற்றும் பங்களாதேஷின் டாக்காவிற்கு புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாகின.
இந்த விமானங்கள் தாமதமாக வருவதால் தனது பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருந்துவதாகவும், விரைவில் இந்த பயணிகளை அவர்களது இடங்களுக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
17 minute ago
43 minute ago