2026 ஏப்ரல் 24, வெள்ளிக்கிழமை

விமான கழிப்பறையில் 1 மணிநேரம் சிக்கிய பயணி

Editorial   / 2024 ஜனவரி 17 , பி.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் மும்பையிலிருந்து பெங்களூருக்குப் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் கழிப்பறையில் மாட்டிக்கொண்டார்.


SpiceJet விமானத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. அந்தக் கழிப்பறையின் கதவு திடீரெனப் பழுதானதால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர் உள்ளே சிக்கிக்கொண்டார்.

விமானம் பெங்களூரில் தரையிறங்கிய பிறகே அவர் கழிப்பறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டார். அவருக்கு உடனடியாகச் சிகிச்சை வழங்கப்பட்டது.நடந்த சம்பவத்துக்காக SpiceJet நிறுவனம் பயணியிடம் மன்னிப்புக் கேட்டது.

பயணிகளின் குறைகளைக் கேட்டறிய இந்தியா முழுதும் 6 முக்கிய விமான நிலையங்களில் பிரத்தியேக அறைகள் அமைக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .