2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

வியட்நாமிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விருப்பம்

Freelancer   / 2022 டிசெம்பர் 23 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் குறித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கோரிக்கைக்கு இணங்க 302 இலங்கையர்களுக்கு உதவியதற்காக ஐக்கிய நாடுகளின் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்புக்கு அமைச்சர் இதன்போது நன்றி தெரிவித்தார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X