2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

விளம்பர பலகை​களை அப்புறப்படுத்த உத்தரவு

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியை அண்மித்த 9 வீதிகளில் காணப்படும் அலங்கார விளம்பர பலகைகளை ஒரு மாதக் காலப்பகுதிக்குள் அகற்றுமாறு, நகர அபிவிருத்தி அதிகார சபை குறித்த நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இவை அகற்றப்படா விட்டால், எந்தவொரு அறிவிப்பும் இன்றி, குறித்த விளம்பரப் பலகைகள் அப்புறப்படுத்தப்படுமெனவும் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பொரலையிலிருந்து நாடாளுமன்றம் வரையான வீதி, நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகிலுள்ள வீதி, கொட்டா வீதி, ஜப்பான் நட்புறவு வீதி( கிம்புலாவல சந்தி வரை), சுனில் மாவத்த, தலவத்துகொட- பிட்டகோட்டே கிம்புலாவல சந்தி வரை, டென்சில் கொப்பேகடுவ மாவத்த, பொல்துவ சந்தியிலிருந்து பத்தரமுல்ல சந்தி வரை, பத்தரமுல்ல சந்தியிலிருந்து பாலம்துன வீதி (பத்தரமுல்ல- பன்னிபிட்டிய) ஆகிய வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பலகைகளையே அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த வீதிகள் நாடாளுமன்றத்தை அழகுப்படுத்தும் வீதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதால், இவ்வாறான விளம்பரப் பலகைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .