2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விளையாட்டு துப்பாக்கியுடன் வந்தவர் கைது

Janu   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பஹ்ரைனில் இருந்து, ரிவால்வர் போன்ற விளையாட்டு துப்பாக்கி ஒன்றை  கொண்டு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் வத்தளை, எண்டேரமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகிறது.

குறித்த நபர் பஹ்ரைனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (21) அன்று  நாட்டிற்கு வந்திருந்துள்ளதுடன் அவரது பயணப் பொதிகளை சோதனையிட்ட போது  விளையாட்டுத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X