Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 21 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து இலங்கை உட்பட உலக நாடுகள் இன்னும் விடுபடாத நிலையில், தொழிற்றுறையிலுள்ளவர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் நடைமுறை, இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடருமென்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் பல மாற்றங்களைச் செய்திருக்கிறது. குறிப்பாக வேலைச் சூழலில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் கடைபிடித்து வந்த 'வீட்டிலிருந்தே வேலை செய்தல்' உலகம் முழுவதும் பரவலாகியுள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பிறகும் கூட வீட்டிலிருந்தே வேலை செய்வது தொடரும் என பல நிறுவனங்கள் உறுதிபட தெரிவித்துள்ளன.
'அடுத்த இரண்டு வருடங்களுக்கு அமெரிக்காவில் 20.5 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையானோர், வீட்டிலிருந்தே தங்கள் அலுவலக வேலையைச் செய்வார்கள்' என்று, குளோபல் ஒர்க்ப்ளேஸ் எனலிடிக்ஸ் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதைத்தவிர இந்தியாவில் செயற்;பட்டு வரும் ஐ.டி.நிறுவனங்கள், தங்களின் ஊழியர்களை, வீட்டிலிருந்தே வேலை செய்ய பரிசீலித்து வருகிறது.
இலங்கையிலும் சில முக்கிய நிறுவனங்கள், தங்களது ஊழியர்களை மறுஅறிவித்தல் விடுக்கும்வரை வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ள நிலையில், அலுவலகத் தளபாடங்கள் உள்ளிட்டவற்றை பணியாளர்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதனால் வேலையாள்கள் அலுவலகம் வந்து போவதற்கான வாகனப் பயன்பாடுகள் குறையும் என்றும் போக்குவரத்து குறைவதால் காற்று மாசுபாடு கட்டுப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரத்தில் வீட்டிலேயே அலுவலக வேலையைப் பார்ப்பதற்கான ஓர் இடத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்துக்கு, வேலையாள்கள் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 Jul 2025
20 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Jul 2025
20 Jul 2025