Thipaan / 2017 செப்டெம்பர் 15 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பொல விதானகே சமன் குமார, அவருடைய மனைவி, அவருடைய தங்கை ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள பணச்சலவை வழக்கின் சாட்சியப்பதிவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (14) திகதி குறித்தது.
மேற்குறிப்பிட்ட மூவரும், 140 மில்லியன் ரூபாய் கறுப்புப் பணத்தை பணச்சலவை செய்தனர் என்று, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பணச் சலவைத் தடுப்புச்சட்டத்தின் கீழ், இவர்களுக்கு எதிராக 57 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த வழக்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சாட்சியப் பதிவுக்கான தினங்களாக டிசெம்பர் 14, 15ஆம் திகதிகளைக் குறித்தார்.
2008ஆம் ஆண்டு, கல்கிஸை பிரதேசத்தில் வைத்து, 7.05 கிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட வெலே சுதா, ஹெரோய்ன் விற்பனை மற்றும் வைத்திருந்த வழக்கில், குற்றவாளியான இனங்காணப்பட்டு மரணதண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .