Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கடை, தும்பறை ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, மரண தண்டனை கைதிகளான, வெலே சுதா, பொட்ட நௌபர் ஆகியோர் உடனடியாக பூஸா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கடும் பாதுகாப்புக்கு மத்தியில் இவர்கள் இருவரும் அழைத்துச் செல்லப்பட்டதுடன் இவர்களுடன் கஞ்சிபான இம்ரானுடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த மூன்று குற்றவாளிகளும் பொலிஸார், சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் பூஸா சிறைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
சிறையில் இருந்தவாரே, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக, சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினர் வழங்கியுள்ள அறிக்கைகளுக்கமைய, மேலும் சில கைதிகளும் இந்த வாரமளவில் இடமாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .