Janu / 2024 பெப்ரவரி 20 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் - மங்கள எளிய பகுதியில் இளைஞன் ஒருவன் தனது வீட்டில் வைத்து உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் திங்கட்கிழமை (19) மீட்கப்பட்டுள்ளார்.
மங்கள எளிய பகுதியைச் சேர்ந்த காவிந்த மதுசங்க என்ற 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
உயிரிழந்த இளைஞனின் தாயும், சகோதரியும் சந்தைக்கு சென்ற நிலையில், வீட்டில் இளைஞனும், தந்தையுமே இருந்துள்ளனர். இதன்போது, தந்தை தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்த்துக்கொண்டிருந்த போது குறித்த இளைஞன் வீட்டின் அறையொன்றுக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டுள்ளார் .
இந் நிலையில், சந்தைக்கு சென்ற தாயும், சகோதரியும் வீட்டுக்கு வந்து , மகனை தேடி அறையின் கதவை தட்டி அழைத்த போதும் இளைஞனிடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்காதமையால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இளைஞன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
உடனடியாக அவரை முந்தல் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள போதிலும், இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் வெளிநாடு செல்வதற்காக 75,000 ரூபாய் பணம் கேட்டதாகவும், தற்போது கையில் பணம் இல்லாததால் , மோட்டார் சைக்கிளை விற்று அல்லது அடகு வைத்து பணத்தை ஒழுங்கு செய்து தருவதாக தான் கூறியதாகவும் , வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுமோ என்ற மன அழுத்தம் மகனுக்கு இருந்ததாகவும் தந்தை தெரிவித்துள்ள முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த இளைஞனின் சடலம் வீட்டாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
42 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago