Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 29 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.கண்ணன்
எளிதில் கிருமித் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய நீரிழிவு, இதய நோய், உயர் குருதியமுக்கம், கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோயாளிகளை, வைத்தியசாலைகளுக்கு வரவேண்டாமென, சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில், மேற்படி நோயாளிகளுக்குக் காணப்படும் அதிக ஆபத்துக் காரணமாக நோயாளர்கள், பிணி நிலையத்துக்கு (கிளினிக்) வரவேண்டாம் என்று ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்றும் அதற்குப் பதிலாக அவர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஆரோக்கியமான பொறுப்புடைய ஒருவரை, பிணி நிலையத்துக்கு கிளினிக் புத்தகத்துடன் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், இது குறித்த தேவையான சேவைகள் வழங்குவதற்காக அரச வைத்தியசாலைகள் பிணி நிலைய நேர அட்டவணையின்படி செயல்பட்டு வருவதுடன், இரு மாதங்களுக்குத் தேவையான மருந்தும் வழங்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பிணி நிலையத்துக்கு அவர்களால் வரமுடியாவிட்டால் ஏதேனுமொரு வார நாள்களில் அம்மருந்துகளை வெளிநோயாளர்கள் பிரிவில் அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பிணி நிலைய புத்தகப் பதிவுகள் அல்லது நோயறிதல் அட்டைகள், ஊரடங்கு அமுலின் போது அனுமதிப்பத்திரமாகப் பயன்படுத்தலாம் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
10 minute ago
34 minute ago
58 minute ago