Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 மே 06 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அழகன் கனகராஜ்
நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்த் தரப்பினர்கள் எழுந்துநின்றுகொண்டு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தமையால், அவை நடவடிக்கைகளை சபாநாயகர் கரு ஜயசூரிய, சற்றுமுன்னர் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார்.
55 மில்லியன் ரூபாய் பெறுமதியான குறைநிறப்புப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் ஆளும், எதிர்த் தரப்பினர் வாத விவாதம் செய்தனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, நிதியமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாய் குறைநிறப்புத் தொகை பிழையானது என்றும் அத்தொகைக்கான அங்கிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் பின்னர், அறிவிக்கப்பட்ட பெறுபேறு தவறு என்றும் எதிரணியினர் சுட்டிக்காட்டினர். அரசாங்கம் சமர்ப்பித்த குறைநிரப்புப் பிரேரணை, 55 மில்லியனுக்கானது அல்ல. 2500 மில்லியனுக்கானது எனவும் சுட்டிக்காட்டினர்.
எனினும், வாக்கெடுப்பை மீள நடத்துவதற்கு நிலையியற்கட்டளையில் இடமில்லை என்றும் வாக்கெடுப்பில் சந்தேகம் ஏற்பட்டால், பெறுபேறு அறிவிக்கப்படுவதற்கு முன்னரே அக்கிராசனத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டுமென ஆளும் தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
இந்த வாதப் பிரதிவாதங்களால், சபை சூடுபிடித்தது. எனினும், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், விஜயதாச ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ எம்.பி ஆகியோர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பில் 11.30க்கு நடத்தவிருக்கும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போது கலந்துரையாடுவோம் என்றும் சபாநாயகர் அறிவித்தார்.
படைகல சேவிதர்கள் 'செங்கோலை' காப்பாற்றுவதற்காக வந்தனர். நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு, அவையை 5 நிமிடங்களுக்கு சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர், நண்பகல் 12.05க்கு சபை மீண்டும் கூடியது. இதன்போது, வாக்கெடுப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு, அடுத்த நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறியதுடன், சபையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் சென்றார்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago