2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

விஜித எம்.பி போதையில் இருக்கவில்லை

Kogilavani   / 2016 ஜூன் 02 , மு.ப. 03:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், அஜாக்கிரதையாக வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டில் அவரைக் குற்றவாளியாக்கிய கொழும்பு மேலதிக நீதவான் சந்தன கலன்சூரிய, 1,500 ரூபாயை, அரச கட்டணமாகச் செலுத்துமாறு கட்டளையிட்டார். போதையில், வாகனத்தைச் செலுத்தினார் என்ற குற்றச்சாட்டை மேலோட்டமாக பார்த்து நிரூபிக்கமுடியாது என்றும் சுட்டிக்காட்டிய மேலதிக நீதவான் அக்குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுவித்தார்.

அதற்கு மேலதிகமாக, விபத்தின் காரணமாக சேதமடைந்த தொலைத்தொடர்பு கம்பத்துக்காக 17,400 ரூபாவை செலுத்துமாறும் நீதவான் கட்டளையிட்டார்.

விஜித எம்.பி செலுத்திச் சென்ற வாகனம், வீதிக்கு அருகிலுள்ள கம்பத்துடன், கடந்த திங்கட்கிழமை (30) இரவு  மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .