2025 மே 22, வியாழக்கிழமை

வேட்புமனுக்கள் நிராகரித்த ஐவருக்கும் அனுமதியளிப்பு

Thipaan   / 2015 டிசெம்பர் 31 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 3ஆம் திகதி,  இடம்பெறவிருக்கின்ற இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தாக்கல் செய்து, நிராகரிக்கப்பட்ட ஐந்துபேரின் வேட்புமனுக்களை மீண்டும்

ஏற்றுக்கொண்டு அவர்களையும் போட்டியிடுவதற்கு அனுமதியளிக்குமாறு உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது,

இந்த வழக்குக்கான தீர்ப்பு கடந்த 18ஆம் திகதி வழக்கப்பட்டது. எனினும், அந்த நீதியரசர் குழுவில் தலைவராக கடமையாற்றிய ஈவா வனசுந்தர, வெளிநாட்டுக்குச் சென்றிருந்தமையால் அந்தக் கட்டளையில் கையொப்பமிடாமையால், பிரதமர நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான குழுவினர், அக்கட்டளையை மீண்டும் நேற்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர்.

உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கு எதிர்வரும் 10ஆம் திகதிவரையிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை கூடியது. விடுமுறைக்காலத்தில், உயர்நீதிமன்றம் கூடியது இதுவே முதன்முறையாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X