Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
'400 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகள் தொடர்பில் உரிய விவரங்களை வெளிப்படுத்தவில்லை' என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வௌிநாடு செல்வதற்கு ரோஹித்த அபேகுணவர்தனவுக்கு விடுக்கப்பட்ட தடையுத்தரவை தற்காலிகமாக நீக்கிக் கொள்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் நிஷாந்த பந்துல கருணாரதன, இந்த உத்தரவை இன்று வியாழக்கிழமை பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, 1 மாதகாலம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்திருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றபோது, நீதியரசர் இதனைக் கூறியுள்ளார்.
நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20ஆம் திகதி வரை ஜப்பானில் இடம்பெறும் மத மற்றும் கலாசார மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக அவருக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago