2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இரண்டு ஆசிரியர்கள் பலி: மற்றுமிருவர் காயம்

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்பாவெல - கொக்கிராவ பிரதான வீதியில் 15ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை(30) ஏற்பட்ட வாகன விபத்தில் ஆசிரியர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் இருவர் இந்த விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகாலை 1 மணியளவில் குறித ஆசிரியர்கள் பயணித்த வாகனம், பிரதான வீதிக்கு பக்கத்தில் இருந்த மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.

 எப்பாவெல நல்லமுதாவ வித்தியாலயத்தைச் சேர்ந்த கேஷன் குருகே (வயது 36) மற்றும் மலித ரத்னாயக்க ஆகிய இரண்டு ஆசிரியர்களே உயிரிழந்துள்ளனர்.

குறித்த வித்தியாலயத்தின் அதிபர், மற்றுமொரு நபர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X