2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர்கள் காயம்

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா, சூரங்கள் பிரதேசத்தில்  சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் உதைப்பந்தாட்ட வீரர்கள் 12 பேர் காயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிண்ணியா பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இன்று கிண்ணியா எழிலரங்கு மைதானத்தில் ஆரம்பமானது.

சூரங்கல் பிரதேச இளைஞர் கழக வீரர்கள் குறித்த போட்டியில் கலந்து விட்டு உழவு இயந்திரம் ஒன்றில்  வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்களில் இருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் ஏனையோர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X