2025 மே 21, புதன்கிழமை

விமல் வழங்கிய வீடுகள் விவகாரம்: விசாரணை ஆரம்பம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தேகொடை மற்றும் கஹகுடுவ பிரதேசங்களில் வீடமைப்புத் திட்டத்தின் கீழ், நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்தொகுதி, முன்னாள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்சவின் குடும்பத்தினரிடையே பங்கிடப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.அதற்கமைய, விமல் வீரவன்சவின் மைத்துனர்கள் இருவர் உட்பட நான்கு நபர்களிடம், ஜனாதிபதி ஆணைக்குழு வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் பெறுமதி மிக்க இந்த அரச வீடுகள், மிகவும் குறைந்த விலைக்கு, எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படாமல் தமது உறவினர்களுக்கு விமல் வீரவன்சவால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக, ஆணைக்குழு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .