Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Thipaan / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
வில்பத்து காடழிப்பு தொடர்பான பிரச்சினையை ஆராய, ஒரு குழு அமைக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வில்பத்தில் முஸ்லிம்களை குடியேற்றியதாக தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை மறுத்தார். இந்த விவகாரத்தை, பொலிஸ் ஆணைக்குழு விசாரிக்கலாமென அவர் கூறினார்.
ஜனாதிபதி விசாரணைக்குழு, இலஞ்ச ஆணைக்குழு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் ஆகியன சட்டவிரோத செயல்களை விசாரிக்கவென்றே உள்ளன. இவர்களில் எவரும் ஏன் இதனை விசாரிக்கவில்லையென அவர் கேள்வியெழுப்பினார். வில்பத்து காடழிப்பில் தனக்கு தொடர்பு ஏதும் இல்லையென அவர் கூறினார்.
'இவை அநியாய குற்றச்சாட்டுக்கள். யாராவது நான், வில்பத்தில் இடம்பெயர்ந்து குடியமர்த்தியதாக நிருபித்தால் நான் அன்றிலிருந்து விலகிவிடுவேன் என அவர் கூறினார்.
தேரரொருவர் ஒரு ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் பதியுதீன், காடுகளை அழிக்கின்றார் எனவும் போதைப்பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.தேரரிடமிருந்து, தான் ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரவுள்ளதாகவும். அவர் தெரிவித்தார்.'
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
3 hours ago