2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வெளிநாட்டவர் மூவர் சிக்கினர்

Thipaan   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி பஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள பணம் பெறும் தன்னியக்க இயந்திரத்திலிருந்து பணத்தைக் களவெடுப்பதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டவர் மூவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த மூவரையும் வங்கிச் சேவையாளரே பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். அந்த மூவரும் மிகவும் சந்தேகத்துக்கிடமான முறையில், சுற்றித்திரிவதாக கிடைத்த தகவலையடுத்தே, வங்கிச் சேவையாளர் அவ்விடத்தை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார்.

அதன் பின்னரே அந்த மூவரையும் அவர், பிடித்து பொலிஸாரிடம் கையளித்துள்ளார். இதேவேளை, அவர்களிடமிருந்து காட் அட்டைகள் பலவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X