2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளை வான்;பொய்யான புரளி

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊடகவியலாளர்களைக் கைதுசெய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொய்யான புரளிகளை கிளப்பவேண்டாம் என்றும், அது முற்றிலும் பொய்யானது என்றும், ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நாடாளுமன்றத்தில் நேற்று பிரஸ்தாபித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

ஊடகவியலாளர்கள் சிலர், நிதிமோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது என்று தினேஷ் குணவர்தன எம்.பி சுட்டிக்காட்டியதை அடுத்தே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று, வெள்ளை வான் இல்லை, தலைமுடியை அரைவாசிக்கு அரைவாசியாக வெட்டப்படமாட்டாது. தாடியும் அரைவாசியாக வெட்டப்படாது. அச்சத்தினால், நாட்டைவிட்டு யாரும் ஓடுவதில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் கயந்த, ஊடகவியலாளர்கள் பின்னர் வெள்ளை வான் சுற்றுவதாகக் கூறப்படுவதில் எவ்விதமான உண்மையும் இல்லை என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X