Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஸ்ரீ தலதா வழிப்பாட்டு' நிகழ்வில் பங்கேற்ற ஒருவரால் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் புகைப்படம் தொடர்பில் பொலிஸ் ஊடகப்பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த வழிப்பாட்டு நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு தங்களது கையடக்க தொலைபேசிகளை செயல்பாட்டில் வைத்திருக்கவோ அல்லது புகைப்படம் எடுக்கவோ எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை.
எனினும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் புகைப்படம் தலதா மாளிகையின் 'ஸ்ரீ தலதா வழிப்பாட்டு' காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமா, புகைப்படத்தை எடுத்தவர் யார் அல்லது இது திருத்தி வடிவமைக்கப்பட்ட புகைப்படமா என்பதைக் கண்டறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து, பதில் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
45 minute ago