Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 23 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் பலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்று இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கட்சியின் மறுசீரமைப்பு பணிகளின் கீழ் இந்தப் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், எதிர்கால மறுசீரமைப்பு பணிகள் தொடர்பில் ஜனாதிபதி இதன்போது அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளார்.
இதற்கமைய, பதுளை மாவட்டம்- நிமல் சிறிபால டீ சில்வா, கண்டி- எஸ்.பீ. திசாநாயக்க, ஹம்பாந்தோட்டை- மஹிந்த அமரவீர, களுத்துறை- மஹிந்த சமரசிங்க, குருநாகல் – தயாசிறி ஜயசேகர, அநுராதபுரம்- துமிந்த திசாநாயக்க, கேகாலை- ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கம்பஹா- லசந்த அழகியவன்ன,மாத்தளை- லக்ஸ்மன் வசந்த, கொழும்பு- திலங்க சுமதிபால, காலி- ஷான் விஜயலால் டீ சில்வா, மாத்தறை- டீ.விஜய தஹாநாயக்க, அம்பாறை- ஸ்ரீயானி விஜேவிக்ரம, மட்டக்களப்பு- எம்.எல்.எம்.ஹிஸ்புல்லா, மட்டக்களப்பு தமிழ்பிரதிநிதிகளின் தலைவராக குணரத்னம் ஹரிதரன், யாழ்/கிளிநொச்சி- அங்கஜன் ராமநாதன், வன்னி- காதர் மஸ்தான், நுவரெலியா- டபிள்யு.ஜீ. ரணசிங்க, இரத்தினபுரி- அத்துல குமார ராஹுபத்த, திருகோணமலை- ஆரியவதி கலப்பதி ஆகியோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மாவட்டத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
1 hours ago