2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘ஸ்ரீ ல.சு.கட்சியில் விரிசல் ஏற்படவில்லை’

Editorial   / 2019 ஜனவரி 07 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் எந்தவொரு விரிசலும் இல்லையென்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவர் சாந்த பண்டார  தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் ஏதாவது முரண்பாடுகள் ஏற்பட்டால் அதை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தீர்ப்பார்களென்றும் எதிர்காலத் தேர்தலுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் இணைந்து கூட்டமைப்பை கட்டியெழுப்புவரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுக்கு கட்சியுடன் ஏதேனும் முரண்பாடுகள் காணப்படுமாயின்  அவர் அதனை தீர்த்தப் பின்னர் மீண்டும் கட்சியுடன் இணைந்துக்கொள்ளுமாறு தான் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .