2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘ஸ்ரீ.ல.சு. கட்சி அட்டவணைக்கேற்ப செயற்படும்’

Editorial   / 2018 டிசெம்பர் 19 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

அட்டவணைக்கேற்ப எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென்றும் தற்போது கட்சியிடம் முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்களை முன்னெடுக்கவும் நேற்றைய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க எவரேனும் செல்வார்களாயின் அவர்களுக்கு எவ்வித அமைச்சுப் பதவியும் வழங்கப்படாதிருக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க மத்தியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன், ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தீர்மானித்துள்ளதாகவும் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .