2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2016 நவம்பர் 06 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

ஹட்டன் நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து ஆணொருவரின்  சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது

இந்த வர்த்தக நிலையத்துக்கு எதிராக ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வர்த்தக நிலையமானது நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மூட்பட்டிருந்தது.

பாதுகாப்பற்ற நிலையிலிருந்த குறித்த வர்த்தக நிலையத்திலிருந்தே மேற்படி சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். பொதுமக்களின் தகவலுக்கமைய இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது,

ஹட்டன் நகரில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலை செய்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக அறியமுடிகின்றது. ஹட்டன் மாவட்ட நீதவான்,  சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக, நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கொலைச்செய்யப்பட்டாரா அல்லது தற்கொலைச் செய்துகொண்டாரா? இல்லையேல் இயற்கையான மரணமா? என்பது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .