2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹம்பாந்தோட்டைக்கு பிரதமர் விஜயம்

Niroshini   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டைக்கு இன்று விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றான மிரிஜ்ஜவிலை வரண்ட வலய பூங்காவுக்கு சென்று ஞாபகார்த்தமாக மூலிகை மரமொன்றினை நட்டு நினைவுப் புத்தகத்தில் ஒப்பமிட்டார்.

இந் நிகழ்வில் அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ,நிமல் சிறிபால டி சில்வா, மலிக்சமரவிக்கிரம, சாகல ரத்நாயக்க, மஹிந்த அமரவீர, காமினி ஜயவிக்கிரம பெரேரா, அர்ஜூன ரணதுங்க உட்பட  பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையும் தம்மள விமான நிலையம் உள்ளிட்ட சில பகுதிகளையும் பிரதமர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X