Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 23, வெள்ளிக்கிழமை
J.A. George / 2025 பெப்ரவரி 27 , மு.ப. 11:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரக் கட்டா எனப்படும் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை “ஸ்கைப்” ஊடாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான தமது நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு பிரதிவாதிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
பாதுகாப்பு காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்டவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட மாட்டார் என்று அரச சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஸ்கைப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழக்கை விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசத் தரப்பினால் நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மார்ச் 17 ஆம் திகதி எதிர்த்தரப்பு சட்டரத்தரணிகள் நீதிமன்றத்தில் தங்கள் நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
5 hours ago
6 hours ago