Freelancer / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், மீண்டும் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகிய நபரின் நெருங்கிய தொடர்பாளராக இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் படுவந்துடாவா தெரிவித்தார்.
தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பைப் பேணிய முதல் நிலை உறுப்பினர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் பாதிக்கப்படலாம் அல்லது வைரஸ் பரவலாம் என்றும் குறிப்பிட்டார்.
தனிமைப்படுத்தலுக்குப் பின்னர், பிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்த அவர், அறிகுறிகள் இல்லை என்றாலும், அவர் வைரஸ் கடத்தியாக இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு முன்னர், கடந்த மாதம் தனது அலுவலக ஊழியர்களில் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக டொக்டர் ஹேரத், சுய தனிமைப்படுத்தலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
20 Dec 2025
20 Dec 2025
20 Dec 2025