2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘அரசாங்கத்தின் மீதான எதிர்பார்ப்பு விழவில்லை’

Gavitha   / 2016 நவம்பர் 28 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

“குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் வந்தபோதிலும், நாட்டு மக்கள் என்னை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்த போது வைத்திருந்த நம்பிக்கையும், தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும், அப்படியே இருக்கிறது” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

அந்த நம்பிக்கையுடன் நாட்டை முன்னேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு இருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாகவும், அவர் குறிப்பிட்டார்.  “பாணந்துறை நகரில் சனிக்கிழமையன்று நடைபெற்ற பாணந்துறை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமை மேம்படுத்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலமான ஜனநாயகக் கட்சியாக கட்டியெழுப்பி எதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான தமது பொறுப்பை நிறைவேற்றுதல் அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்” என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.  

“அரசியல்வாதிகள் ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் இல்லாத நபர்களாக மாறவேண்டும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, நாட்டையும் மக்களையும் நேசிக்கும், நாட்டை கட்டியெழுப்பும் தூய்மையான எண்ணமுடைய எவரும் மக்கள் பணத்தையும் அரச வளங்களையும் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்த முடியாது” எனவும் மேலும் தெரிவித்தார்.  

பொதுமக்களின் பிரச்சனைகளை தீர்த்துவைத்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கி நியாயமான சமூகத்தை உருவாக்குதல் சுதந்திரக் கட்சியின் கொள்கையென குறிப்பிட்ட ஜனாதிபதி, அடுத்த ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் தேசியத் திட்டத்தோடு இணைந்ததாக 9 மாகாணங்களிலுமுள்ள கிராமப்புற மக்களுக்குத் தேவையான பொருளாதார உதவிகளை வழங்கி, அவர்களது நலனுக்காக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .