2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அரசியல் குறுகிய தேவைகளுக்காக சுதந்திரத்தை பயன்படுத்தக்கூடாது

Niroshini   / 2016 நவம்பர் 16 , பி.ப. 01:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை குறுகிய அரசியல் தேவைகளுக்காகவோ இனவாத அல்லது மதவாத அடிப்படையிலோ பயன்படுத்துவது நாட்டின் எதிர்கால பயணத்துக்கு தடையாக அமையும்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரவித்தார்.

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் 47ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“இன்றைய அரசாங்கம் அரச கொள்கைகளுக்கமைய சகல துறைகளிலுமான பொறுப்புக்களையும் கடமைகளையும் நிறைவேற்றி வருகிறது. நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் நாட்டு மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ள அரசாங்கம் படிப்படியாக முன்னோக்கி பயணிக்கிறது. ஒருசிலர் எதிர்பார்ப்பது போல் உடனடியாக தீர்வு காணமுடியாதபோதிலும், முறையான திட்டங்கள் மூலம் நாட்டினதும் மக்களினதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பாடுபடுகிறது” என்றார்.

“சுதந்திர சுகாதார சேவையை மேலும் பலப்படுத்துவதுடன், அத்துறையிலுள்ள அனைவரினதும் தொழில் சிறப்புரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்” எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .