2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

2ஆவது கடற்படை பயிற்சிகள் நிறைவு

George   / 2016 ஜூன் 12 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளுக்கான பிரிவினால் 2ஆவது முறையாக வாகரை கடற்படைமுகாமில் முன்னெடுக்கப்பட்ட நீர் மற்றும் நிலப் பகுதி படை நடவடிக்கைப் பயிற்சிகள் அண்மையில் (ஜுன் 09 ஆம் திகதி ) நிறைவுக்கு வந்துள்ளதாக இராணுவம் தெரிவித்தது.

மேற்படி படை நடவடிக்கைப் பயிற்சிகள் முள்ளிக்குளத்தில் அமைந்துள்ள இலங்கை கடற்படை முகாமில் கடந்த ஏப்ரல், 27ஆம்; திகதி ஆரம்பிக்கப்பட்டன.

நீர், நிலப் பகுதிகளுக்கான படை நடவடிக்கை, முகாமிடல் பயிற்சி ஒத்திகைகள், இணைந்த பயிற்சி ஒத்திகைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு வார கால பயிற்சி நடவடிக்கையாக இது அமைந்திருந்தது.

இந்தப் பயிற்சி நெறியில் கடற்படையைச் சேர்ந்த 11 அதிகாரிகள் மற்றும் 108 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இப்பயிற்சி நிறைவு விழாவில் கடற்படையின் ரோந்து நடவடிக்கைகளுக்கான பிரிவின் பணிப்பாளர் கமாண்டோ உதேனி சேரசிங்கவின் அழைப்பின் பேரில் கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, பிரதம அதிதியாக கலந்துக் கொண்டுள்ளார். 

இதேவேளை, இந்தநிகழ்வில் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

படங்கள்: இராணுவ ஊடகப் பிரிவு


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .