2025 மே 21, புதன்கிழமை

(இணைப்பு) பதியதலாவை விபத்தில் ஒருவர் பலி, 27 பேர் காயம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 10 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதியத்தலாவை மஹாஓயா வீதியில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மற்றும் லொறி என்பன மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
வீதியில் இருந்து சறுக்கிய பஸ், லொறியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் லொறியின் சாரதி பலியானதுடன்  உதவியாளர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 
 
காயமடைந்த சாரதி பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். மல்கம்மன மாத்தளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய புத்திக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் பதியத்தலாவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை வெள்ளிக்கிழமை மரண விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் சாரதி மதுபோதையில் இருந்ததன் காரணமாக பதியத்தலாவை பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதாகவும்  
காயமடைந்தவர்கள் பதியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகப்பேச்சாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .