Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு, யூனியன் பிளேஸில் அமைந்துள்ள இரவு களியாட்ட விடுதியில், கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில், பிரபல அரசியல்வாதியின் மகன் யாரும் தொடர்புபடவில்லை என, அதன் முகாமையாளர் தெரிவித்துள்ள கருத்து, சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“குறித்த விடுதியில் அன்றைய தினம் மோதல் சம்பவம் இடம்பெற்றது உண்மை எனினும், அதில் பிரபல அரசியல்வாதியின் மகன் தொடர்புபட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி பொய்யானது” என அவர் தெரிவித்துள்ளார்.
சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் களியாட்ட வீடுதிக்குள் சிலர் பிரவேசிக்க முயன்றதாகவும் அவர்களுக்கு முதல் அனுமதி மறுக்கப்பட்டதுடன் பின்னர் அனுமதி வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறும்போது இரவு விடுதியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கிறிஸ்தோபர் கரன் என்ற பெயருடைய முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், விடுதியின் ஊழியர்கள் 3 பேர் காயமடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இந்த சம்பவம் இடம்பெற்றபோது தான் கடமையில் இருந்ததாகவும், பிரபல அரசியல்வாதியின் மகன் யாரும் சம்பவ இடத்தில் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையை மட்டும் வெளியிடுமாறும், தவறான செய்தியால் தமது வியாபார நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago