Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 நவம்பர் 20 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஷ் மதுசங்க
ஜனநாயகத்தின் ஊடக ஆட்சிபீடத்தை கைப்பற்ற முடியாதவர்கள் பல்வேறான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறானவர்களுக்கே இராணுவ சூழ்ச்சிகள் தேவைப்படுகின்றன. எனினும், இராணுவச் சதியின் ஊடாக, இலங்கையில் யாருக்கும் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
வவுனியா பொலிஸ் நிலையத்துக்கான நீர்சுத்திகரிப்பு மத்திய நிலைய திறப்பு விழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிந்த அவரிடம், வடக்கு பாதுகாப்பு தொடர்பில் திருப்தி கொள்ள முடியாதுள்ளதாக ஓய்வு பெய்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளாரே என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், வடக்கு பாதுகாப்பு தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என்றால், அந்த நிலைமையை உருவாக்கியவர்களே அவர்கள்தான். அந்த நிலைமைக்கு பாதுக்காப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் பொறுப்பு கூறவேண்டும் என்பதை தெளிவாகவே கூறுகின்றேன்.
வட மாகாணத்தில் இவ்வாறான ஆயுதக்குழுக்கள் உருவாவதற்கு, இந்த பிரிவினர்தான் அடிப்படையாக இருந்தனர். அவ்வாறான சூழ்ச்சியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கோரியுள்ளோம்.
இலங்கையில், இராணு சூழ்ச்சிக்கு இடமிருப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.
அவ்வாறானதொரு நிலைமையொன்று ஏற்படவேண்டும் என்பதே அவர்களின் ஆசையாகும். எனினும், இலங்கையில் அது இடம்பெறாது. ஜனநாயகவழியில் ஆட்சிபீடம் ஏறமுடியாது என்று அவர்களுக்கு தற்போது தெரியும். ஆகையால்தான் இராணுவ சூழ்ச்சி இடம்பெறுவதாக பரப்புரை செய்கின்றனர்.
வடக்கில், ஆவா குழுவை உருவாக்கியதன் நோக்கம் வேறாகும். 2015ஆம் ஆண்டு தேர்தலில் வாக்குகளை கொள்ளையடிப்பதற்காகவே இந்தக் குழு உருவாக்கப்பட்டது. எனினும். அந்த முயற்சி கைகூடவில்லை.
அந்தக்குழுவை, உருவாக்கியவர்கள் யாரென்று எங்களுக்கு தெரியும். அவர்கள் தொடர்பிலான சகல அறிக்கைகளும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் இருக்கிறது. அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் எங்களுக்கு தெரியும், ஆவா குழுவை உருவாக்கியவர்கள்தான் தற்போது பாதுகாப்பு இல்லை என்று பரப்புரை செய்கின்றனர் என்றார்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago