2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'இவரை கண்டால் சொல்லுங்கள்'

George   / 2016 நவம்பர் 21 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில், உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்தமை மற்றும் பலர் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இரண்டாவது சந்தேக நபருடைய புகைப்படத்தை, பொலிஸ் தலைமையகம், இன்று  திங்கட்கிழமை (21) வெளியிட்டுள்ளது.

இந்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த இரண்டாவது சந்தேக நபர், இரண்டு அடையாள அட்டைகளை பாவித்து வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் இரண்டு அடையாள அட்டைகளின் விவரங்களையும் பொலிஸார், தற்போது வெளியிட்டுள்ளனர்.

ஒரு அடையாள அட்டையில்,

கந்தேகெதரலாகே ஷமில மதுசங்க,

பிறந்த திகதி- 30.08.1980,

முகவரி- இல: 693, கொட்டாவ, பன்னிப்பிட்டி,

தே.அ.இ: 802436939V

கடவுச்சீட்டு இலக்கம் N5204998 என்றத் தகவல் காணப்படுகின்றது.

மற்றைய அடையாள அட்டையில்,

ஜாலன் கந்தம்பி சமிந்த,

பிறந்த திகதி- 30.08.1981,

முகவரி- இல: 693ஃ2, குலசெவன வீதி, கொட்டாவ.

தே.அ.இ: 812431935V  என்ற விவரங்கள் உள்ளன.

சந்தேகநபர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள், பயங்கரவாத புலனாய்வு பிரிவினரின் பிரதி பொலிஸ்மா அதிபரின் இலக்கமான 0772001021, 0112451633 மற்றும் 0112451636 ஆகிய இலக்கங்களுன் அழைப்பினை ஏற்படுத்தி  தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .