2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'உடைத்துக்கொண்டுச் சென்றால், மஹிந்த அவ்வளவுதான்'

George   / 2016 ஒக்டோபர் 07 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையான ஆதராளர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது விருப்பத்துடன் உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ, புதிய கட்சியொன்றை உருவாக்கினால் அவர்கள் தூரமாகச் சென்றவிடுவார்கள்' என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

'தலைவர்கள் கட்சி மாறியபோது, ஆதரவாளர்கள் ஒருபோதும் கட்சியை கைவிட்டுச் சென்றதில்லை. அவர்கள் கட்சியை பாதுகாத்தார்கள்.

ஆனால், இந்த அரசாங்கம் மீது கிராமத்திலுள்ள ஸ்ரீ லங்காத சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள், ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் விருப்பமில்லை. உண்மையான நிலை அதுதான். அதனை நாங்கள் அறிவோம். இருந்தாலும், இந்த அரசாங்கத்தால் நாட்டில் நிறைய வெற்றிகளை பெறமுடிந்துள்ளது' என்றார்.

பத்தரமுல்லையில்  இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .