2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘எம்.ஆர்’க்கு இகழ்ச்சி; ‘ஐயா’வுக்கு புகழ்ச்சி

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில், நேற்று உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதியும்
எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷவை (எம்.ஆர்) இகழ்ந்தும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை (ஐயா) புகழ்ந்தும் பேசினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி, மேலும் கூறியதாவது,   

“தேசிய பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கு, இரா. சம்பந்தனும் அவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் சிறந்த ஒத்துழைப்பை வழங்குகின்றனர். 50 வருட அரசியல் அனுபவம் எனக்கு இருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதில், வடக்கு, கிழக்கின் சிறந்த தலைவரான சம்பந்தன் எம்முடன் இருக்கிறார்.

இதற்கு முன்னர் இருந்த சிறந்த தலைவரான அமிர்தலிங்கம், விடுதலைப் புலிகளினால் சுட்டுக்கொல்லப்பட்டார்.   
நியாயபூர்வமான தீர்வொன்றைக் காண்பதற்கு சம்பந்தனும் அவரது கட்சியினரும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.

இந்த ஒத்துழைப்பு கடந்த காலங்களில் வடக்கு தலைவர்களிடம் இருந்து பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கிடைத்திருக்கவில்லை. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரப் பகிர்வு தொடர்பில், ஆட்சியில் இருந்த போது ஒன்றையும், அதிகாரத்தில் இல்லாதபோது, மீண்டும் அதிகாரத்து வரும் எதிர்பார்ப்பில் இன்னொன்றையும் கூறுவது துரதிர்ஷ்டவசமானது.   

ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், 13ஆவது திருத்தம் என்றும் இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரிடம் 13 பிளஸ் என்றும் கூறிய மஹிந்த, தற்போது, ஆட்சியை கைப்பற்றுவதற்காக 13ஆவது திருத்தம், நாட்டை பிரிக்கும் யோசனையென சுட்டிக்காட்டினார்.   

இதேவேளை, போராட்டங்களால் அப்பாவிப் பொதுமக்களே பாதிக்கப்படுவதால், பிரச்சினைகள் எதுவும் இருப்பின், அரசாங்கத்துடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று, வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடும் தொழிற்சங்கங்களுக்கு ஜனாதிபதி பகிரங்க அழைப்பையும் இதன்போது விடுத்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .