2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'கங்கட்டா'வுக்கு மீண்டும் தடுப்பு

Princiya Dixci   / 2016 மே 10 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஷெஹான் சாமிக்க சில்வா

கொழும்பு நூதனசாலையில் மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான கலைப்படைப்புகள் திருடப்பட்ட கொள்ளைச் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபரான 'கங்கட்டா' என அழைக்கப்படும் பிரியந்த மென்டிஸை, எதிர்வரும் மே 23ஆம் திகதிவரை மீளத் தடுத்து வைப்பதற்கு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டார்.

சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் இன்னமும் கிடைக்கப்பெறாத காரணத்தினாலேயே, அவரின் தடுப்புக் காலம் நீடிக்கப்படுவதாக, நீதவான் தெரிவித்தார்.

இந்த வழக்கில் ஏழாவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவரே பிரியந்த என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் அனைவரும், பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

முன்னைய சந்தர்ப்பமொன்றில் பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவிடம் கருத்தொன்றை வழங்கியிருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குறித்த விசாரணை தொடர்பான விவரங்கள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்ததோடு, அதன் காரணமாக ஜூன் 27ஆம் திகதி வரை வழக்குப் பிற்போடப்பட்டிருந்தது.

கொழும்பு நூதனசாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தக் கொள்ளையில், தங்கம் பதிக்கப்பட்ட வாள்கள் 10, மணிக்கல் பொதிக்கப்பட்ட தங்க மோதிரம், தங்க நாணயங்கள் 93, வெள்ளி மோதிரங்கள் 18, வெள்ளிக் காசுகள் 50, ஈயக் காசுகள் 9, நாணயத் தாள்கள் 34, தங்க மற்றும் வெள்ளி வாள் ஒன்று, இரத்தினக்கல் பொதிக்கப்பட்ட கைத்தடிப் பிடிகள் இரண்டு, தங்க மற்றும் வெள்ளி வேலைகள் செய்யப்பட்ட இடுப்புப்பட்டி, பெறுமதிமிக்க தங்கள் மற்றும் வெள்ளி பொதிக்கப்பட்ட வாள்கள் என்பன கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X