2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'கடல்சார் பங்களிப்புக்கான தேவை அதிகரித்துள்ளது'

George   / 2016 நவம்பர் 28 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“காலி பேச்சுவார்த்தை 2016' எனும் சர்வதேச கடற் பாதுகாப்பு மாநாடு,  “கடல்சார் பங்களிப்பை வளர்ப்பதற்கான  மூலோபாயம்”  என்ற தொனிபொருளில் கொழும்பு காலி முகத்திடல் விடுதியில் இன்று திங்கட்கிழமை (28) காலை ஆரம்பமானது.

இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கலந்து ​கொண்டார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன,   பீல்ட் மாரஷல் சரத் பொன்சேகா, முப்படைகளினதும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

40 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படைகளின்  தளபதிகள் உள்ளிட்ட 120 அதிகாரிகள் இந்த பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டனர்.

கடல்சார்  பிராந்தியத்துக்கு இடையில் வலுவான பங்களிப்பை உறுதிசெய்வதற்கான தேவை முன்பைவிட அதிகரித்துள்ளது” என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

“கடல்வழி போக்குவரத்து விவகாரத்தில் இன்றைய தீர்மானங்கள் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை,  எதிர்கால விவகாரங்களில் தாக்கம் செலுத்தும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையானது, இந்திய கடற்பரப்பில் கிழக்கு - மேற்கை இணைக்கும் முக்கிய புள்ளியாக அமைந்துள்ளதுடன்  இந்திய கடற்பரப்பில் வர்த்தக மற்றும் சுற்றுலாத் துறையை எதிர்காலத்தில் விருத்திச் செய்ய எதிர்பார்த்துள்ளோம்.

இந்திய கடற்பிராந்தியமானது “வளர்ந்துவரும் ஈர்ப்பு மையம்” என்பதாக மாறியுள்ளதுடன், 21ஆம் நுாற்றாண்டின் சக்தி இயக்கவியலின் இடமாக அமைந்துள்ளது. இன்றைய தினம் இங்கு வந்துள்ள நாம் அனைவரும் நமது கடற்பரப்பை மனித குலத்தின் நன்மைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தி எதிர்கால சந்ததியினருக்கான நமது பொறுப்பினை உறுதிசெய்ய வேண்டும்”என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்வதேச கடற்பாதுகாப்பு மாநாடு, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில்,  இலங்கை கடற்படையினரின் ஏற்பாட்டில் கடந்த 2010 ஆண்டு முதல் முறையாக இலங்கையில் ஆரம்பமானது.

2010 இல் 11 நாடுகளை சேர்ந்த 22 பேரும், 2011 இல்  20 நாடுகளின் 37 பிரதிநிதிகளும் 2012 இல் 17 நாடுகளைசேரந்த 36 பேரும் 2003 இல் 35 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 90 பேர் கலந்துகொண்டதுடன் 2014 ஆம் ஆண்டுக்கான மாநாட்டில் 36 கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டுக்கான இந்த மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை நிறைவடையவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .