2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'கட்டாயப்படுத்தியாவது மஹிந்தவை இணைத்துக் கொள்வோம்'

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கட்டாயப்படுத்தியாவது இணைத்துக்கொள்ளவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனப்பூர்வமாக இந்தக் கட்சியுடன் உள்ளதாகவும்  இந்த கட்சியில் இணைவதற்காக அவர்களுக்கு சட்ட ரீதியான பாதிப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஊடாக முன்னெடுக்கப்பட்ட முதலாவது செய்தியாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

நெலும் மாவத்தையில் உள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பிரதான காரியாலயத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .