Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஏப்ரல் 28 , பி.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்திருந்த தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொண்டெனேகுரோ நாட்டின் எண்ணெய் கப்பலின் பிரதம அதிகாரியான வொடோரடோசிக் (வயது 56),இன்று வியாழக்கிழமை (28) மாலை 6 மணியளவில் தவறுதலாக கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
மொண்டெனேகுரோ நாட்டின் எம்.எல்.வீ.சீ கெல் என்றழைக்கப்படும் எண்ணெய் கப்பல், துறைமுகத்தில் எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்த நேரத்தில் கயிற்றிலான ஏணியில் தொங்கிய நிலையில் கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதே காலிடறி கடலில் விழுந்துள்ளார்.
இதுதொடர்பில், கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, விரைந்து செயற்பட்ட கடற்படையினர், கப்பல் பிரதம அதிகாரியை சடலமாகவே மீட்டுள்ளனர். சடலம், திருகோணமலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்தனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago