2025 மே 22, வியாழக்கிழமை

19க்கு முன்னர் மாற்றம்

Gavitha   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் மீண்டும் மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொது எதிரணியில் இருக்கின்றவர்களில் அறுவர், அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவிருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் மூவர் மட்மே அரசாங்கத்தில் இணைந்துகொள்ளவுள்ளதாக அறியமுடிகின்றது.

அதனையடுதே அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலிக்கு விஜயம் செய்திருக்கின்ற ஜனாதிபதி நாடு திரும்பியதும் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அறியமுடிகின்றது.

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் 46 பேரும் இராஜா ங்க அமைச்சர்கள் 19 பேரும் பிரதியமைச்சர்கள் 21 பேரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X