2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

‘கை’யை விட்டு மஹிந்த மொட்டுக்குத் தாவமாட்டார்

Princiya Dixci   / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.நிரோஷினி

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்வதாகத் தெரிவித்திருக்கவில்லை” என்று தெரிவித்த பெற்றோலியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி, அவர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில்  சேரமாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சிக்கு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கிடையாது என்றும் சுட்டிக்காட்டினார்.  

இந்த புதிய கட்சியின் முதன்மை அங்கத்தவர்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்களான பீரிஸ் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இருவருமே கடந்த தேர்தல்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தோல்விகளுக்கு பிரதான காரணக்கர்த்தாக்களாக இருந்தனர்.  

‘சுதந்திரக் கட்சியை விட்டுச் செல்வதாக மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தெரிவித்திருக்கவில்லை. அது மட்டுமல்லாது, எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த கட்சியில் அங்கம் வகிக்கவில்லை. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .