2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

222 கிராம் கொக்கேய்ன் விவகாரம்: 10 பேரும் தடுத்துவைப்பு

Kanagaraj   / 2016 மே 03 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் விசேட அதிரடிப்படை இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில், 222 கிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 10 பேர், நேற்றுத் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இவர்களில், எட்டுப் பேர், நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் என்றும் ஏனைய இருவரும் இலங்கை ஜோடியென்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.  

இந்த இணைத்தேடுதல் நடவடிக்கைகள் இராகம, கல்கிஸை மற்றும் பத்தரமுல்ல ஆகிய பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. கல்கிஸைப் பகுதியில் வைத்து 152 கிராமும் களனிப்பகுதியில் வைத்து 50 கிராமும் இராகம பகுதியில் வைத்து 20 கிராமும் மீட்கப்பட்டுள்ளன என்றும் அப்பிரிவு அறிவித்துள்ளது.

சந்தேகநபர்களை, கொழும்பு-கோட்டை நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதவான் முன்னிலையில் நேற்றுத் திங்கட்கிழமை ஆஜர்படுத்தியபோது, அவர்களை 7 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபரொருவர் தப்பியோடிவிட்டதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X