2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'குறைநிரப்புப் பிரேரணை மீதான விவகாரத்தை ஆராய்ந்து அறிக்கையிடவும்'

Kanagaraj   / 2016 மே 12 , மு.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 55 மில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்புப் பிரேரணை மீதான விவாதத்தின்போது, ஆளுந்தரப்பு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் குறித்து, முழுமையான அறிக்கையை வழங்குமாறு, சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நேற்றுப் பணித்துள்ளார்.

இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடைபெற்ற தினத்தன்று பிரதமர், சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு, முறையாக இடம்பெறவில்லையென, எதிர்க்கட்சிகள், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறையிட்டதையடுத்து, அவ்விவகாரம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறு, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான குழுவை, சபாநாயகர் நியமித்திருந்தார்.

நாடுதிரும்பிய பிரதமர், சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவை அழைத்து, இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்புத் தொடர்பில், கேட்டறிந்துகொண்டார்.

வாக்கெடுப்பின்போது ஆளுந்தரப்பினரின் எண்ணிக்கை குறைந்தமைக்கான காரணம், அதற்குப் பொறுப்பாக இருந்த பிரிவினரின் செயற்பாடு உள்ளிட்டவை தொடர்பில், அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொண்ட பிரதமர் கேட்டுக் கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X