2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது'

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், எப்.முபாரக்,வா.கிருஸ்ணா

கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதோ மங்கிப்போயுள்ளதெ அம்மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இலங்கையின் வரலாற்றில் கிழக்கு மாகாணத்தை எடுத்துக்காட்டான மாகாணமாக மாற்றவேண்டுமென்பதற்காக சேவைகளை  செய்து வருகிறோம். அங்கு வாழ்கின்ற மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும். அவர்களுக்கான சேவைகளை விகிதாசார முறையில் வழங்கி, சரியான வேலைகளை முன்னெடுத்துள்ளோம். அதற்காக எமது அமைச்சர்கள் உறுதியுடன் செயற்படுகின்றனர்.

'மேலும், சில்லறைத்தனமாக அரசியல் செய்வோருக்கு அஞ்சும் முதலமைச்சராக கிழக்கு மாகாண முதலமைச்சர் இருக்கமாட்டார்.  கடந்த பல வருடங்களாக அரசியல் செய்யும் இவர்களால் கிழக்கு மக்கள் கண்ட பலன்கள் என்ன? எனது ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் பாரிய  புரட்சியை ஏற்படுத்திவிட்டே ஓய்வு பெறுவேன்' என்றார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .